இந்தியா

திருச்சானூர் - திருமலை 23 கிமீ அங்க பிரதட்சணம்: நேர்த்திக் கடன் செலுத்திய இதய நோயாளி

என்.மகேஷ் குமார்

திருப்பதியை சேர்ந்தவர் பொன் னால சுதாகர். இவர் ஏழுமலை யானின் தீவிர பக்தர். கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயி லில் அங்க பிரதட்சணம் செய் வதை வழக்கமாக கொண்டவர். வெள்ளிக்கிழமைதோறும் திருச் சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும், திங்கட்கிழமைகளில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலும் அங்க பிரதட்சணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு இதயத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் மனமுடைந்த சுதாகர், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தால், திருச்சானூரில் இருந்து திருமலைக்கு அங்க பிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டார். சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, சுதாகர் தனது நேர்த்தி கடனைச் செலுத்த, கடந்த வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளன்று, திருச்சானூர் பத்மாவதி தாயார் சன்னதியில் இருந்து அங்க பிரதட்சணம் செய்ய தொடங்கினார்.

அங்கிருந்து திருப்பதி வழியாக திருமலைக்கு மலைப் பாதையில் உள்ள படிக்கட்டு மீதேறி, அங்க பிரதட்சணம் செய்தபடியே, 65 மணி நேரத்தில் திருமலை வந்தடைந்தார்.

பின்னர் அவர் ஏழுமலையானை தரிசித்தார்.

SCROLL FOR NEXT