எழுத்தாளரும், பத்திரிகையாளரு மான க.சீ.சிவகுமார் நேற்று மாலை பெங்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இவரின் திடீர் மறைவு தமிழ் எழுத்துலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் க.சீ.சிவகுமார் (46). இவரது இயற்பெயர் கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார். சொந்த ஊரில் படித்து முடித்த இவர், சிறுவயதில் இருந்தே எழுத்தின் மீது தீரா காதலுடன் இருந்தார். இதனால் திருப்பூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் கள் சங்கத்துடன் இணைந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.
தீவிரமாக எழுத வேண்டு மென்ற நோக்கத்தில் சென்னைக்கு இடம்பெயர்ந்த இவர் விகடன், தினமலர் உள்ளிட்ட பத்திரிகை நிறு வனங்களில் சில ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றி னார். வாசகர்களை கவரும் வகை யில் சிறுகதை, நாவல்கள் எழுதிய க.சீ.சிவகுமார், கன்னிவாடி, ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக்கடலை குடிக்கும் பூனை, க.சீ.சிவ குமார் குறுநாவல்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். மிக குறுகிய காலத்தில் 150-க்கும் மேற் பட்ட சிறுகதைகளை எழுதியுள் ளார். சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கிய சிந்தனை விருது' பெற்றுள்ளார்.