இந்தியா

தெலங்கானாவை எதிர்த்து சீமாந்திராவில் வேலை நிறுத்தம்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித் தெலங்கானா உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திர அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயவாடா, திருப்பதி, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் தெலங்கானா எதிர்ப்பாளர்கள் பேரணி, மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஆந்திர சட்டமன்றத்தில் புறக்கணிக்கப்பட்ட தனித் தெலங்கானா மசோதாவை மக்களவையில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

தெலங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் புதன் கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா செய்தார். பின்னர், குடியரசுத் தலைவரையும் சந்தித்து ஆந்திர பிரிவினையை தடுக்க வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT