இந்தியா

தேர்தல் தோல்வியை ஆராய ஆம் ஆத்மி முடிவு

பிடிஐ

பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கான காரணங்களை கட்சி ஆராயும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ் கூறும்போது, “தேர்தல் முடிவுகளால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். தோல்விக் கான காரணங்களை ஆராய்வோம்” என்றார். டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கூறும்போது, “பஞ்சாப் மற்றும் கோவாவில் இத்தகைய முடிவுகளை கட்சி எதிர்பார்க்க வில்லை. தோல்விக்கான காரணங் களை ஆய்வு செய்யவேண்டி யுள்ளது. என்றாலும் தேசிய அரங்கில் எங்கள் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது” என்றார்.

இரு மாநில தேர்தல்களிலும் ஆம் ஆம் கட்சி தனது முழு பலத்தையும் காட்டியது. கேஜ்ரிவால் கடந்த சில மாதங்களில் பஞ்சாபில் மட்டும் 95-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசினார்.

SCROLL FOR NEXT