இந்தியா

பாட்னா குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு மோடி ஆறுதல்; பிகார் மக்களுக்கு புகழாரம்

செய்திப்பிரிவு

பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சனிக்கிழமை ஆறுதல் கூறினார். மேலும், பாட்னா காந்தி மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். "பிகார் மக்களின் உத்வேகத்தைக் கண்டு வியந்து பாராட்டுகிறேன். குண்டுவெடிப்புக்குப் பின்னும் அமைதி காத்ததற்கு வணங்குகிறேன். இதற்காக, பிகாரையும், பிகார் மக்களையும் வணங்குகிறேன்" என்றார் மோடி. சிறப்பு விமானம் மூலம் பிகார் வந்த மோடிக்கு, பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதேவேளையில், மோடியின் இந்த வருகை, அரசியல் நாடகம் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சி விமர்சித்துள்ளது.

SCROLL FOR NEXT