இந்தியா

ம.பி.யில் தேர்தல் சீட் கிடைக்காத காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்காத விரக்தியில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மத்தியப் பிரதேசத்தில் இம்மாதம் 25-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், அகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட நர்சிங் மாளவியா (40 வயது) என்பவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்கவில்லை.

இதனால், கடந்த ஒரு வாரமாக மன அழுத்தத்துடன் இருந்த அவர் இன்று (வியாழக்கிழமை) காலை தனது வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

இந்தத் தகவல் அறிந்ததும் அவரை உஜ்ஜைனி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் அகர் மாவட்டப் பிரிவில் பொறுப்பு வகித்து வந்த நர்சிங், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் சிங் வர்மாவின் தீவிர ஆதரவாளர் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

SCROLL FOR NEXT