தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே. அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் சொத் துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வை அப்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து நியமித்தார்.
இந்த அமர்வு கடந்த நவம்பர் 23-ம் தேதி, ''அனைத்து தரப்பின ரும் தாங்கள் இறுதிவாதம் செய்யப் போகும் அம்சங்கள் அடங்கிய தொகுப்பை எழுத்துப்பூர்வமாக ஜனவரி 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்''என உத்தர விட்டது. இறுதிவாதம் செய்யப் போகும் அம்சங்கள் தொகுப்பு கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ''உச்ச நீதிமன்றத் தில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு 8-ம் தேதி விசாரிக்கப்படாது''என உச்ச நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி அறிவித்தது.
நீதிபதி அதிரடி மாற்றம்
உச்ச நீதிமன்ற பதிவுத்துறை நேற்று மாலை துணை அறிவிப்பு பட்டியல் வெளியிட்டது. அதில், ''சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதி மன்ற அறை எண் 11-ல், 52-வது வழக் காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்'' என தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்க ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நீதிபதி ஆர்.கே. அகர்வால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இன்று ஜெயலலிதா மீதான சொத் துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை எவ்வாறு விசாரிப்பது, நாள்தோறும் வழக்கை விசாரிப் பதா? எந்தெந்த அம்சங்களை இறுதி வாதத்தின் போது விவாதிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இன்று முடி வெடுக்கப்படும் என தெரிகிறது.