இந்தியா

சமாஜ்வாதியில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் பிரவீண் குமார்

பிடிஐ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீண் குமார் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பிரவீண் குமார் கூறும் போது “முதல்வரைச் சந்தித் தேன். கட்சியில் இணைய முடி வெடுத்தேன். கட்சிக்கு என்னால் இயன்றதைச் செய்வேன்” என்றார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கேட்டபோது, “அரசியல் களத்தில் நான் குழந்தை. தற் போதைக்கு அரசியலைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன்” என்றார்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய செய்துள்ளார். லக்னோ, சாய்பாய் பகுதிகளில் பெரிய மைதானங்கள் கட்டப்பட்டு வரு கின்றன. விளையாட்டுத் துறை தவிர, மாநிலத்தில் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் முதல்வர் ஏராளமானவற்றைச் செய்துள்ளார்” என்றார்.

பிரவீண் குமார் இந்தியாவுக் காக 6 சர்வதேச டெஸ்ட் கிரிக் கெட் போட்டிகள், 68 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று முறையே 27, 77 விக்கெட்டுகளைக் கைப்பற்றி யுள்ளார்.

பிரவீண் குமார்

SCROLL FOR NEXT