மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் சமூக இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்ததாக, முஸ்லிம் மத குரு மௌலானா தாகீர் ராஸா தொடர்ந்த வழக்கில், வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை மிரட்டக் கூடாது என உத்தரப்பிரதேச போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சௌகான் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.
மனித உரிமைகளும் தஸ்லிமா நஸ்ரினின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என நஸ்ரினின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதிட்டதை அடுத்து, ‘தாகீர் ராஸா தொடர்ந்த வழக்கில் நஸ்ரினுக்கு போலீஸார் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பலாம். ஆனால் அவரை மிரட்டவோ, பலப்பிரயோகம் செய்யவோ கூடாது’ என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஸ்லிமா நஸ்ரின் மீது மத சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாகீர் ராஸா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.