இந்தியா

சீன ராணுவம் ஊடுருவவில்லை: கிரண் ரிஜிஜு

பிடிஐ

அருணாசலப் பிரதேச எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதாக வெளியான தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார்.

தனது சொந்த மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு வந்த அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது: எல்லை இதுதான் என்று உறுதியான வரையறை செய்யப்படாத நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. சமீபகாலமாக எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை. சில நேரங்களில் தங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவிவிட்டதாக சீனா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ரோந்து செல்லும்போது இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லையை கடக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

நமது எல்லைக்குள் சீனாவை அனுமதிக்கக் கூடாது. இது விஷயத்தில் முழு விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென்று ராணுவத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கிரண் ரிஜ்ஜு கூறினார்.

SCROLL FOR NEXT