இந்தியா

அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து: 50 பயணிகள் காயம்; 19 பேர் கவலைக்கிடம்

செய்திப்பிரிவு

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் 50 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 19 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

திமாபுர் - காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில், டெகிரியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயில் தடம்புரண்டது. இன்ஜினும், 10 பெட்டிகளும் தடம் புரண்டன. இதன் காரணமாக இந்த மார்க்கத்தில் செல்லும் திப்ருகார் - ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட 8-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT