ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர் பாக 39 ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் மத்திய செயலக சேவை பிரிவில் பணி யாற்றும் 29 பேர் ஒழுங்கு நடவடிக் கையை எதிர்நோக்கி இருப்பவர்கள் ஆவர்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆண்டுதோறும் ஆட்களைத் தேர்வு செய்கிறது. ஆட்சியர், துணை ஆட்சியர், செய லாளர், காவல் ஆணையர் உள்ளிட்ட அரசுத் துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் இவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புகார்களின் அடிப்படை யிலும் துறைரீதியான விசாரணை யும் நடத்தப்படுகிறது. உயர் பதவி வகிக்கும் இவர்களது பதவிக்காலத்தில் 15 ஆண்டுக்குப் பிறகும், அதேபோல் 25 ஆண்டு களுக்குப் பிறகும் இரண்டு முறை இவர்களது சேவையை மேம்படுத் துவதற்காக மத்திய அரசு செயல் திறன் மதிப்பிடல் நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் புகார்களின் பேரில் தற்போது 68 உயர் அதிகாரிகள் மீது விசாரணை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள் ளது. இவர்களில் ஒருசிலர் உயர் பொறுப்புகளில் இருந்து வருகின்ற னர். இவர்கள் பணிச் சேவை மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரும் விசாரணை வளையத்துக்குள் சிக்கி யுள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் பணி மற்றும் சேவை குறைபாடு காரண மாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகள் உட்பட 129 பேரை மத்திய அரசு கட்டாய ஓய்வில் அனுப் பியது. பணி செயல்திறன் பதிவு ஆவணத்தில் செயல்திறன் குறைவு எனக் கண்டறியப்பட்ட சுமார் 67,000 பேரில் 25,000 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவி வகிப்பவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.