இந்தியா

பொது கணக்கு குழு தலைவர் ஆகிறார் கார்கே

பிடிஐ

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவராக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸ், 3-வது முறையாக பொது கணக்குக் குழு தலைவராக உள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடை கிறது. இந்நிலையில் இப்பதவி யில் கார்கேவை நியமிக்கும்படி மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓராண்டு பதவிக் காலம் கொண்ட இந்தப் பதவி முக்கிய எதிர்க்கட்சி எம்.பி.க்கு தரப்படுவது வழக்கம். மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தரப்படவில்லை.

இப்பதவி மூலம் கார்கே, கேபினட் அமைச்சர் அந்தஸ்தும், நாடாளுமன்றத்தில் அலுவலகமும் பெறமுடியும்.

SCROLL FOR NEXT