பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) நேரில் ஆஜராக உள்ளார்.
இதுகுறித்து பொது கணக்கு குழு தலைவர் கே.வி. தாமஸ் நேற்று கூறும்போது, “பண மதிப்பு நீக்க விவகாரத்தில் நிதி அமைச்சக அதிகாரிகளும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் ஜனவரி 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தோம்.
பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதால் அது முடியும் வரை அவகாசம் தருமாறு நிதி அமைச்சக அதிகாரிகள் கேட்டனர். இதனால் அவர்களுடனான சந்திப்பு பிப்ரவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தரப்பில், ஜனவரி 20-ம் தேதி சந்திப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வரவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, அவர் ஜனவரி 20-ம் தேதி எங்கள் குழு முன் ஆஜராக உள்ளார்” என்றார்.
கூட்டத்தை தள்ளி வைக்கு மாறு கே.வி.தாமஸுக்கு குழு உறுப்பினர்களில் ஒருவரான, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் கடிதம் எழுதியிருந்தார்.