இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிடிஐ

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் அத்துமீறி ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்குக் காஷ்மீரில் தாங்தார் மாவட்டத்தில் இந்திய எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அங்கு படைகளை அதிகப்படுத்திய இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகளை குறிவைத்து கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே வெகு நேரம் நீடித்தத் துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகளும், அதற்கான தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT