இந்தியா

பிர்பும் வன்முறை: மேற்கு வங்கத்தில் 5 பேர் கைது

ஐஏஎன்எஸ்

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் 3 பேரை பலிவாங்கிய அரசியல் மோதல் தொடர்பாக போலீஸார் நேற்று 5 பேரை கைது செய்தனர்.

பிர்பும் மாவட்டத்தின் மக்ரா என்ற கிராமத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் பாஜக ஆதரவாளர்கள் இடையே கடந்த திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதில் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் 10 பேரை விசாரணைக்காக காவலில் வைத்துள்ளதாகவும் கூடுதல் எஸ்.பி. ஆனந்த ராய் கூறினார். கிராமத்தில் நிலைமையை மதிப்பிட பாஜக சார்பில் பிரநிதிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT