இந்தியா

தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த மோடியின் மவுனம்: லாலு கடும் தாக்கு

பிடிஐ

குஜராத், உனா சம்பவம் தொடர்பாக ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும், போராட்டங்களும் வலுத்த நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி வாய் திறவாமல் இருப்பதன் நோக்கம் என்ன என்று லாலு பிரசாத் யாதவ் கடும் விமர்சனம் வைத்தார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள லாலு: “மற்றவர்களின் இருமலுக்கும் தும்மலுக்கும் கூச்சல் போடும் மோடி, தலித்துகள் அடித்து உதைக்கப்படுவது குறித்து நீண்ட மவுனம் சாதித்து வருகிறார். ஒருவேளை அவரது தூண்டுதலின் பேரில்தான் தலித்துகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுகிறதோ?” என்று கூறியுள்ளார்.

மகன் தேஜஸ்விட் யாதவ் தனது ட்வீட்டில், “உங்கள் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன, உங்கள் தொண்டர்களுக்கு கடுமையான செய்தியை வெளியிடுங்கள்” என்றார், இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே லாலு தனது ட்வீட்டில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நேற்றும் மோடியின் மவுனத்தை விமர்சித்த லாலு தனது ட்வீட்டில், “தொப்பி கீழே விழுந்தால் கூட பிரதமர் கதறுகிறார், 7 கடல் தாண்டி நடப்பவைகள் குறித்து ட்வீட்களை இடுகிறார், ஆனால் குஜராத்தில் நடந்த துரதிர்ஷ்ட சம்பவங்கள் குறித்து ஒரு வார்த்தை இல்லை” என்று தாக்கியிருந்தார்.

இன்று தொடர்ந்து 2-வது நாளாக பிரதமரின் போக்கை கண்டித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

SCROLL FOR NEXT