உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், லேப்டாப், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுகா தார வசதிகள் உள்ளிட்ட பல் வேறு வாக்குறுதிகள் அளிக்கப் பட்டுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்துக்கு வரும் 15-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் டேராடூனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். பின்னர் அவர், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது தனி மாநில அந்தஸ்து பெற்ற உத்தராகண்ட் மாநிலத்துக்காக இந்த அறிக்கையை வெளியிடுவது பாஜகவுக்கு பெருமிதத்தை தருகி றது. உத்தராகண்டில் ஊழலற்ற நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். இங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவுவதால் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மத்திய அரசுடன் கூட்டாக இணைந்து இங்கு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். கல்வி மற்றும் சுற்றுலாத் துறையில் ஏராளமான வளர்ச்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. அதை நிச்சயம் வெளிக் கொண்டு வருவோம்’’ என்றார்.
14 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முகப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன. தவிர உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்களின் படங் களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் சமுதாயத்தில் பின் தங்கிய மாணவிகள் பட்டப் மேற்படிப்பு செல்லும் வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது.
இது தவிர பல்கலைக்கழகங் களில் இலவச வை-பை வசதி, மாவட்டம்தோறும் மாணவிகள் தங்கிப் படிப்பதற்கான பள்ளிக்கூடங்கள், கல்வியை வணிகமயத்தில் இருந்து காப்பாற்று வது, ஊழலுக்கு முற்றுப்புள்ளி, ஏழைகளுக்கு சுகாதார வசதி உள்ளிட்ட வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.