தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற இன்னும் 2 நாள்கள் மட்டுமே கெடு உள்ள நிலையில், மேலும் 3 வாரம் அவகாசம் கேட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.
தெலங்கானா மசோதாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 13-ம் ஆந்திர சட்ட மன்றத்துக்கு அனுப்பி வைத்தார். இம்மசோதா கடந்த 16-ம் தேதி அவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், காரசார விவாதங்கள் நடை பெற்றுவந்த வேளையில், 23-ம் தேதி யுடன் முடியும் கெடுவை நீட்டிக்குமாறு முதல்வர் உள்ளிட்ட பலர் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.
இம்மாதம் 30-ம் தேதி வரை கெடு நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் தெலங்கானா மசோதாவில் பல தவறுகள் உள்ளதால், இதை திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கினார். முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், ஆதர வாகவும் உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் 2 நாள்கள் ஒத்திவைக்கப் பட்டன.
இதேபோன்று செவ்வாய்க் கிழமையும் பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது. இதனிடையே, தெலங்கானா மசோதாவை சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற மேலும் 3வாரம் அவகாசம் கேட்டு குடியரசுத் தலைவருக்கு
முதல்வர் கிரண் குமார் ரெட்டி நேற்று கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் சீமாந்திரா பகுதி அமைச்சர்கள் பலரும் கையெழுத் திட்டுள்ளனர்.