காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பச் செய்வதற்கான நடவடிக்கையின்போது அனைத் துத் தரப்பு கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும். காஷ்மீரின் நிலையில் விரைவில் மாறுதல் ஏற் படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நேற்று நடைபெற்ற கடலோர ரோந்து வாகனம் ‘ஐசிஜி சாரதி’ அறிமுக விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
அண்மையில் காஷ்மீர் சென்று வந்த அனைத்துக் கட்சிக் குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து வருகிறது. காஷ்மீரின் நிலையை மேம்படுத்த அரசு தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. மக்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அனைத்துக் கட்சிக் குழு கூட்டத்துக்குப் பிறகு, மாற்றம் வெளிப்படையாகத் தெரிகிறது. அங்கு அமைதி திரும்பச் செய்வதற் கான நடவடிக்கையின்போது அனைத்துத் தரப்பினரின் கருத்து களையும் கவனத்தில் கொள்ள முழு முயற்சி எடுத்து வருகிறோம்.
இதுபோன்ற பதற்ற நிலையை நீண்ட காலத்துக்கு எதிர்கொள்வது கடினம் என்பதை காஷ்மீர் மக்கள் உணர்ந்துள்ளனர். அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எதிர் காலத்திலும் அனைத்துத் தரப்பின ரின் கருத்துகளும் ஏற்கப்படும். காஷ்மீரின் நிலையில் மாற்றம் தெரிகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் நிலைமை கட்டுக் குள் இருக்கிறது. மிக விரைவில் காஷ்மீரில் அனைத்தும் முழுமை யான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க 10 ஆயிரம் சிறப்பு காவல் அதிகாரிகள் பணி யிடங்களை நிரப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிலானி சந்திப்பு ரத்து
பிரிவினைவாத தலைவர் சயீத் அலி கிலானி நேற்று செய்தியாளர் கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந் தார். ஹைதர்போரா பகுதியில் உள்ள வீட்டில் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்கள் நேற்று அங்கு சென்றபோது, பாதுகாப்புப் படை யினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், கிலானியின் செய்தியாளர் கள் சந்திப்பு ரத்தானது.
ராணுவ தலைமைத் தளபதி தல்பிர் சிங் சுஹாக் காஷ்மீர் நிலைமையை நேற்று நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக தெற்கு காஷ்மீரில் அதிகம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஆய்வு செய்தார். மேலும், குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் ஊடுருவலைத் தடுப்பதற்கான வேலி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளையும் பார்வையிட்டார். அவர் டெல்லி திரும்பும் முன் ஆளுநர் என்.என்.வோராவை சந்திப்பார் என ராணுவ வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
மீண்டும் ஊரடங்கு
வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முன்னிட்டு, காஷ்மீரின் பல பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத் தப்பட்டது. நகரில் 14 காவல் நிலைய எல்லைகள், அனந்த்நாக், புல்வாமா, குல்காம், சோபியான், பாம்போர், அவந்திபோரா, டிரால், பாரமுல்லா, பட்டான், பல்ஹல்லன் ஆகிய நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.