மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில், கவுகாத்தி நோக்கிச் சென்ற கபிகுரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 2 குட்டி யானைகள் உள்பட 6 யானைகள் உடல் நசுங்கி பலியாகின. ரயில் நகர்கடா பகுதியில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
இது குறித்து, மேற்கு வங்க வனத் துறை அமைச்சர் ஹிடென் பார்மன் கூறுகையில் : இந்த விபத்துக்கு முழு காரணம் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே.
நகர்கடா பகுதியில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலய பகுதி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் 40 கி,மீ. மேல் வேகத்தில் செல்லக்கூடாது என அறிவுறத்தப்பட்டுள்ளது. ஆனால், நேற்றிரவு சம்பவம் நடந்த போது கபிகுரு எக்ஸ்பிரஸ் ரயில் அதிக வேகத்தில் சென்றுள்ளது, என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.