இந்தியா

பாஜக அழுத்தத்தினால் கேஜ்ரிவாலுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்ற குஜராத் வர்த்தக அமைப்பு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிடிஐ

குஜராத் மாநில பாஜக கொடுத்த நெருக்கடியினால் கேஜ்ரிவாலுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றது வர்த்தக அமைப்பு ஒன்று.

அடுத்த வாரத்தில் குஜராத் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மாநில பாஜக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக கேஜ்ரிவாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்றது வர்த்தக அமைப்பு.

“சூரத் வியாபாரி மகாமண்டல் ஜூலை 10-ம் தேதியன்று உரை நிகழ்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஜூலை 9-ம் தேதி சோம்நாத் கோயிலுக்குச் சென்ற பிறகு 2017 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் ஈடுபடுவதாக இருந்தது.

வர்த்தக அமைப்பு ஹால் ஒன்றையும் புக் செய்தது. இதற்காக முறையாக கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு இது தெரிந்தவுடன் வர்த்தக அமைப்புக்கு நெருக்கடி கொடுத்தது, இதனையடுத்து அழைப்பை வாபஸ் பெற்றது. நாங்கள் வர்த்தக அமைப்பிடம் பேசிப் பார்த்தோம். ஆனால் அவர்களோ மாநில அரசு கொடுக்கும் நெருக்கடியை தாங்க முடியவில்லை என்று கூறினர்.

நிகழ்ச்சி நடைபெறும் தெற்கு குஜராத் பலகலைக் கழகம் எங்களிடம் தெரிவிக்கும் போது, அந்த நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துள்ளோம் ஏனெனில் அதே தினத்தில் வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது என்றனர், ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

கேஜ்ரிவால் முன்னிலையில் நாங்கள் குஜராத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துவோம்” என்று ஆம் ஆத்மி கட்சியின் கானு கல்சாரியா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT