தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகளின் கூட்டு முயற்சி தேவை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படையின் 30-வது எழுச்சி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கூறியதாவது, "தீவிரவாதம் குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதல்ல. அது உலகளவில் அமைத்திக்கு பெரிய இடையூறாக இருக்கிறது. எனவே, தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகளின் கூட்டு முயற்சி தேவை.
இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில சக்திகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், தேச விரோத, தீவிரவாத அமைப்புகளை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். ராணுவத்தின பெண் படை பலத்தை அதிகரிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது" இவ்வாறு அவர் பேசினார்.