இந்தியா

கிரண்குமார் ரெட்டி ராஜினாமா ஏற்பு: மத்திய அரசுக்கு ஆந்திர ஆளுநர் அறிக்கை

செய்திப்பிரிவு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த கிரண் குமார் ரெட்டி முதல்வர் பதவியை கடந்த மாதம் 19-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை இன்று ஏற்றுக் கொண்ட ஆந்திர ஆளுநர் நரசிம்மன். இது தொடர்பாக மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், முதல்வர் பதவியில் இன்னொருவர் நியமிக்கப்படும் வரை ஆந்திராவின் இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி கிரண்குமார் ரெட்டியை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இத்தகைய சூழலில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா என்று ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT