ரயில் பயணிகளின் வசதிக்காக உணவுப் பொருட்களை விநியோ கிக்கும் இயந்திரங்களைப் பொருத்த ரயில்வே திட்டமிட் டுள்ளது. நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவுப் பொருள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. குறிப் பாக, உணவுப் பொருட்கள் தரமாக இருப்பதில்லை, விலை அதிக மாக உள்ளது, நேரத்தில் கிடைப் பதில்லை போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரயிலில் செல்லும் பயணிகளுக்கு, உணவுப் பொருட்களை 24 மணி நேரமும் இயந்திரம் மூலம் விநியோகிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகளுக்கு ஒரு உணவு வழங்கும் இயந்திரம் வீதம் பொருத்தப்படும். பயணிகள் சைவ, அசைவ உணவுகளை ஆர்டர் செய்யலாம். இதற்கான பணத்தை ரொக்கமாகவோ டெபிட் கார்டு மூலமாகவோ செலுத்தும் வசதி உள்ளது.
டெல்லி - லக்னோ உள்ளிட்ட பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களில் உத்கிரிஷ்ட் டபுள்-டெக்கர் ஏசி யாத்ரி (உதய்) விரைவு ரயிலில் விரைவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் உணவுப் பொருள் வழங்கும் இயந்திரங்கள் முதல்கட்டமாக பொருத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த புதிய ரயில் வர்த்தகர்க ளுக்கு வசதியாக இருக்கும். குறிப்பாக, அவர்கள் ஓட்டலில் தங்கும் செலவை மிச்சப்படுத்தும் வகையில், இந்த ரயில் பயணம் இரவு நேரத்தில் அமையும்.
2016 - 17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்த 4 புதிய ரயில்களில் உதய் ரயிலும் அடங்கும். இது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். மற்ற ரயில்களைவிட 40 சதவீதம் கூடுதல் பயணிகளை இது ஏற்றிச் செல்லும்.