இந்தியா

பாக் ஜலசந்தி ரோந்தை அதிகரிக்க இலங்கை கோரிக்கை

செய்திப்பிரிவு

மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இருநாட்டு வெளியுறவுத் துறை, மீன் வளத் துறை மூத்த அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து இலங்கை குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் கூறியதாவது: இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. மீனவர்கள் இழுவை வலை பயன்படுத்துவது படிப்படியாக குறைக்கப்படும் என்று இந்திய தரப்பு உறுதியளித்துள்ளது. மேலும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய தரப்பு ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT