இந்தியா

உழைப்பாளர்கள் தினம் பிரதமர் மோடி புகழாரம்

பிடிஐ

மே தினத்தையொட்டி உழைப்பாளர் களுக்கு வணக்கம் செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்கள் மிகப் பெரிய பங்களிப்பை அளித் திருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று உழைப் பாளர் தினம் வழக்கமான உற் சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்து வரும் தொழிலாளர்களுக்கு இந்த தினத்தில் நாம் வணக்கம் செலுத்து வோம். நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களது பங்கு அளப்பரியது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உதயமான தினத் துக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT