சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்துக்கு விஷமே காரணம் என துணை கோட்டாட்சியர் திட்டவட்டமாக அறிவித்துள் ளதுடன், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பன உள்ளிட்ட விரிவான பார்வையுடன் விசாரிக்கும்படி காவல்துறைக்கு செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டார்.
சுனந்தா மரணம் பற்றி துணை கோட்டாட்சியர் அலோக் சர்மா விசாரணை நடத்தி வருகிறார். அவர் தாக்கல் செய்த அறிக்கையில் சுனந்தா மரணத்தின் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக அவரது குடும்பத்தார் யாரும் சந்தேகிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுனந்தாவின் உடலை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தா சாவு இயற்கையாக நிகழவில்லை என்றும் திடீரென நிகழ்ந்துள்ளதாகவும் தமது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
அதிக அளவில் மருந்து உட்கொண்டதால், அதாவது மருந்து விஷமானதால் இறந்திருக்கலாம் என்றும் கூறி இருக்கின்றனர்.
சுனந்தா கடந்த வெள்ளிக் கிழமை இரவு தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஒட்டலில் சடலமாக கிடந்தார்.
கணவர் சசிதரூருடன் பழக்கம் தொடர்பான விவகாரத்தால் வெகுண்டு பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தராருடன் ட்விட்டரில் தகவல் பரிமாற்றம் நடத்திய மறு தினம் அவரது சோக முடிவு
ஏற்பட்டது. சுனந்தாவின் இரு கைகளிலும் நிறைய இடங்களில் காயங்களும், பலமாக தாக்கப்பட்டதால் இடது
கன்னத்தில் காயமும் இருந்ததாக துணை கோட்டாட்சியரிடம் வழங்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்து வமனை வட்டாரங்கள் கூறியுள் ளன.
அதேவேளையில், இந்த மரணம் காயத்தால் ஏற்பட்டதல்ல என்றும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது..
சுனந்தா சாப்பிடுவதையே தவிர்த்தார் என்பதை உறுதி செய்யும் வகையில் வயிறு காலியாகவே இருந்தது என்றும், சோதனை நடத்த குடலில் இருந்து உணவுப் பொருள் எடுக்கப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் சம்பந்தப்பட்ட மாத்திரை ஒன்றின் 2 அட்டைகள் சுனந்தா உயிரிழந்து கிடந்த ஓட்டல் அறையிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.