உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை எதிர்த்து அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை அமித்ஷா திரும்பப்பெற்றார். இதையடுத்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இவற்றை எதிர்த்து அமித் ஷா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்குகள் தொடர்பாக சட்டரீதியான நிவாரணம் பெறுவதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு விளக்கம் தர விரும்புவதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாக அமித் ஷா தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அமித் ஷா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. முஸாபர்நகர் கலவரத்துக்குப் பழிவாங்கும் விதத்தில் ஜாட் சமூகத்தினரை பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசியிருந்தார். இது தொடர்பாக பிஜ்னூர் மற்றும் ஷாம்லி நகர காவல்துறை அமித் ஷா மீது வழக்குப் பதிவு செய்திருந்தது.