இந்தியா

ஆந்திராவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை: தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி நேற்று காலை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவில் தேர்ச்சி பெற்று ஆந்திர மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். முதலில் கர்னூலில் பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று துணை போலீஸ் கண்காணிப்பாளராக கடந்த ஜனவரி மாதத்தில் விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேறுவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை அலுவலகத்தில் இருந்த சசிக்குமாரின் அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அங்கு பாது காப்புப் பணியில் இருந்த போலீஸ் ஒருவர் ஓடிச் சென்று பார்த்தார். அங்கு, சசி்க்குமார் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் வீழ்ந்து கிடந் தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சசிக் குமார் கொண்டு செல்லப்பட் டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஐபிஎஸ் அதிகாரி சசிக்குமார் இறந்த செய்தியை அறிந்து உடனடி யாக சம்பவ இடத்துக்கு விரைந்த விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி தாகூர் இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘சசிக்குமார் துப்பாக்கியை பார்த்துக் கொண் டிருந்தபோது கை தவறி சுடப் பட்டுள்ளது. இது தற்செயலாக நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு மர்ம சாவாக பதிவு செய்யப்படுகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர், சசிக்குமார் அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீஸார் கண்டெடுத்தனர். அதில், உயர் போலீஸ் அதிகாரி யின் துன்புறுத்தலே தனது தற் கொலைக்கு காரணம் என சசிக்குமார் எழுதி வைத்துள்ள தாக தெரிய வந்துள்ளது. எனவே, இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான சின்ன ராஜப்பா நேரில் சென்று ஆய்வு செய்தார். சசிக்குமார் தற்கொலை குறித்து சிஐடி விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தர விட்டுள்ளார்.

நிச்சயதார்த்தம்

ஐபிஎஸ் அதிகாரி சசிக்கு மாரின் சொந்த ஊரான சத்திய மங்கலம், ரங்கசமுத்திரம் பகுதி யில் அவரின் பெற்றோர் குப்பு சாமி - மயிலம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

ராசிபுரத்தில் பிளஸ் 2 முடித்த சசிக்குமார், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறி யியல் பட்டப்படிப்பு படித்தவர். சசிக்குமாருக்கு கவிதா என்ற தங்கை உள்ளார். அவருக்குத் திருமணமாகிவிட்டது.

சசிக்குமாருக்கும் தாரா புரத்தை அடுத்துள்ள மார்க்கம்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக சசிக்குமாரின் பெற் றோர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பெங்களூரு சென்றிருந்தனர். அவர்களுக்கு சசிக்குமார் தற்கொலை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்து அவர்கள் ஆந்திராவுக்கு விரைந்தனர்.

SCROLL FOR NEXT