மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசும்போது அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் எம்ஜிஆர் பாடல் பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
காஷ்மீர் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சியினரும் தங்கள் விவாதங்களை முன்வைத்தனர்.
காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது, "காஷ்மீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய தேசம் ஒன்றே. தமிழ் சினிமாக்கள் காஷ்மீர் கொண்டாடப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
தமிழ் சினிமாக்களில் காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்ட படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களே. நான் காஷ்மீருக்கு சொந்தமானவன். காஷ்மீர் எனக்குச் சொந்தமானது.

இதனை நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காஷ்மீரில் விளையும் குங்கமப்பூ மிகவும் பிரபலமானது. அந்த குங்குமப்பூவை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணியும் உட்கொள்வது வழக்கம். என் தாய் சாப்பிட்டார். என் மருமகள் சாப்பிட்டார். ஏன் என் பேத்தியும் எதிர்காலத்தில் குங்குமப்பூ உட்கொள்வார். எதற்காகத் தெரியுமா? காஷ்மீரத்து குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும் என்ற நம்பிக்கை. அதனால் நானும் காஷ்மீரியே. அப்படிச் சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமிதம்.

காஷ்மீரை சினிமாக்களில் பார்த்து ஈர்க்கப்பட்ட நான் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்றேன். அது எனது முதல்வர் ஜெயலலிதாவால் சாத்தியமானது. அங்கு சென்றபோதுதான் எனக்கு நிறைய விஷயங்கள் புரிந்தது. அதுவரை தஞ்சாவூர் மட்டுமே செழிப்பான விவசாய நிலம் என்ற எனது எண்ணம் உடைந்தது. காஷ்மீர் அவ்வளவு செழிப்பான பகுதி.

அத்தகைய காஷ்மீர் எப்போதும் அமைதியானதாக அழகானதாக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின், தமிழக முதல்வரின் விருப்பம். காஷ்மீரில் இருந்து தீவிரவாதத்தை வேரறுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் வேண்டுகோள்" என்றார்.

நவநீதகிருஷ்ணன் அருகில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவரது பேச்சைக் கேட்டு ரசித்தவாறு அமர்ந்திருந்தார்.

குரியன் பாராட்டு:

அவை துணைத் தலைவர் குரியன் அதிமுக எம்பி.யின் பேச்சு தேசபக்தி நிறைந்தது. மிகவும் உணர்வுப்பூர்வமானது எனப் பாராட்டினார்.

முன்னதாக நவநீத கிருஷ்ணன் பாடியபோது நீங்கள் விரும்பினால் தொடர்ந்து முழுப்பாடலையும் பாடலாம் என்றார். அதற்கு நவநீத கிருஷ்ணன் எனது நண்பர் மைத்ரேயன் முழுப் பாடலையும் பாடுவார் என்றார். அதற்கு குரியன், மைத்ரேயன் நீங்கள் விரும்பினால் முழுப்பாடலையும் பாட நான் அனுமதிக்கிறேன் என்றார்.