இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக பேமா காண்டு தேர்வு

செய்திப்பிரிவு

அருணாச்சலப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக, நபம் துகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, பேமா காண்டு(37) முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள் ளார். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் குழுவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேமா காண்டு, 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் பதவியில் இருந்து காங்கிரஸ் அதிருப்தி தலைவர் கலிகோபுல் விலகியதை அடுத்து, சட்டப்பேரவையில் நபம் துகி நேற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

நேற்று வாக்கெடுப்பு நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில், கடைசி நேர பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில், மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு வின் மகன் பேமா காண்டு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

காண்டுவின் பெயரை நபம் துகி முன்மொழிய, கூட்டத்தில் பங்கேற்ற 44 எம்எல்ஏக்களும் ஒருமனதாக அதை ஆதரித்தனர். சபாநாயகர் நபம் ரேபியா கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

மொத்தம், 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில், தற்போது 2 சுயேச்சைகள் உட்பட 47 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கி ரஸுக்கு உள்ளது. இதன் அடிப்படை யில், ஆளுநர் ததாகட் ராயை நேற்று சந்தித்து, பேமா காண்டு ஆதரவு கோரினார்.

இதன் பின் செய்தியாளர் களிடம் பேசிய பேமா காண்டு, ‘ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரியுள் ளோம். உரிமை கோரும் கடிதத்தை பரிசீலித்து, ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக ஆளுநர் கூறியிருக்கிறார். பதவி யேற்பு குறித்து அவர் இன்னும் நேரம் எதுவும் குறிப்பிடவில்லை’ என்றார்.

முன்னதாக ஆளுநரை சந்தித்த நபம் துகி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பொறுப் பில் இருந்து விலகுவது குறித்தும், புதிய தலைவராக காண்டு நியமிக்கப்படுவது குறித்தும் முறைப்படி தெரிவித்தார். காண்டு முன்னிலையில் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய நபம் துகி, தற்போதுள்ள சூழலில் பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என ஆளுநர் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

SCROLL FOR NEXT