ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அயோத்தியாவில் நடத்திய இஃப்தார் விருந்தில் பசு இறைச்சி சாப்பிடப்போவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டதோடு உண்ணா நோன்பை பசும்பால் அருந்தி முடித்துக் கொண்டனர்.
இது குறித்து முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூறும்போது, “பசு இறைச்சி நோயை உருவாக்குவது, ஆகவே முஸ்லிம்கள் பசு இறைச்சியை உண்பதில்லை என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும் பசும்பால் ஆரோக்கியத்துக்கு நல்லது, அதில் மருத்துவ குணங்கள் உள்ளன” என்று கூறியுள்ளது.
மேலும் பசுக்களை பாதுகாப்பது மூலம் கிடைக்கும் பயன்களையும் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவினர் அங்கீகரித்துள்ளதாக இந்த்ரேஷ் குமார் தெரிவித்தார்.