இந்தியா

சரியான பாதையில் செல்கிறது மோடி அரசு: ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

ஐஏஎன்எஸ்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆட்சி அமைத்த ஆறு மாதங்களாக மோடி அரசு சரியான திசையில் பயணிக்கிறது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பாராட்டியுள்ளார்.

தசரா பண்டிகையை ஒட்டி நாக்பூரில் நடந்த வழக்கமான பேரணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மோகன் பகவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே ஆகின்றன. ஆனால், அரசு சரியான திசையில் செல்கிறது.

மக்களிடம் இருந்து அரசுக்கு ஆதரவான அலைகள் எழத் துவங்கியுள்ளன. இருப்பினும் ஆண்டுகள் பலவாக நீடிக்கும் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்படாது.

அதற்கான மந்திரக் கோல் எந்த அரசியல்வாதியிடமும் இல்லை. நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட அரசுக்கு சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT