இந்தியா

ஹார்முஸ் பகுதியில் சிக்கியிருக்கும் 18 இந்திய எண்ணெய் கப்பல்கள்

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈ​ரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 18 இந்​திய எண்ணெய் கப்பல்கள் சிக்கி உள்​ளதாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை ஈரான் ராணுவம் முழு​மை​யாக மூடி உள்​ளது. பொது​வாக இந்த ஜலசந்தி வழி​யாக தின​மும் 140 சரக்கு கப்​பல்​கள் கடந்து செல்​வது வழக்​கம். தற்​போது ஈரான் ராணுவம் அனுமதிக்கும் சில கப்​பல்​கள் மட்​டுமே ஹார்​முஸ் ஜலசந்தியை கடந்து செல்​கின்​றன. இதனால் ஆசிய நாடுகளுக்​கான கச்சா எண்​ணெய், சமையல் காஸ் போக்கு​வரத்​தில் 85% முடங்​கி​யிருக்​கிறது.

          

இதுதொடர்​பாக மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை சிறப்பு செய​லா​ளர் ராஜேஷ் குமார் சின்ஹா டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 18 இந்​திய எண்​ணெய் கப்பல்​கள் சிக்கி உள்​ளன. இதில் 3 கப்​பல்​களில் சமையல் காஸ் உள்​ளது. 18 கப்​பல்​களில் 485 மாலுமிகள் உள்​ளனர். அவர்​கள் பாது​காப்​பாக இருக்​கின்​றனர்.

இவை தவிர இந்​திய துறை​முகங்​களுக்கு வர வேண்​டிய 10 வெளி​நாட்டு எண்​ணெய் கப்​பல்​களும் ஹார்​முஸ் ஜலசந்தியில் முடங்கி உள்​ளன. இரு இந்​திய எண்​ணெய் கப்​பல்​கள் அண்​மை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைப் பாதுகாப்​பாகக் கடந்​து வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்​பல்​களில் 94,000 டன் சமையல் காஸ் உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அங்​கோலா​வில் இருந்து எல்​பிஜி மத்​திய பெட்​ரோலிய அமைச்சக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: அங்கோலாவுக்கும் இந்​தி​யா​வுக்​கும் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. கத்​தார், சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், குவைத் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களிடம் இருந்து எல்​பிஜி, எல்​என்ஜி எரி​வா​யுவை இறக்​குமதி செய்ய முடி​யாத சூழலில் அங்​கோலா​வின் உதவியை நாடி உள்​ளோம்.

அந்த நாட்​டிடம் இருந்து எல்​பிஜி எரி​வா​யுவை இறக்​குமதி செய்ய ஓராண்​டுக்​கான ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்பட உள்ளது. மேலும் ஆஸ்​திரேலி​யா, அல்​கேரி​யா, ரஷ்​யா, அமெரிக்​கா, கனடா உள்​ளிட்ட நாடு​களிடம் இருந்​தும் எல்பிஜி எரி​வா​யுவை இறக்​குமதி செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT