பல்வேறு சமூக நலத்திட்டங்களை ஆதார் அட்டையுடன் இணைப்பதற் காக இதுவரை ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டுவிட்டோம், எனவே ஆதார் அட்டையை வழக்கும் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அரசு தலைமை வழக்கறி ஞர் முகுல் ரோஹத்கி உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் விளக்கமளித்துள்ளார்.
அதில், சமூக நலத்திட்டங்கள் பலவற்றுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெற்றால் நாட்டில் வறுமையை கணக்கிடும் முயற்சி முடங்கிவிடும்.
மேலும் இந்தியாவில் உள்ள சுமார் 120 கோடி பேரில் 80 கோடி பேருக்கு ஏற்கெனவே ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டது. எனவே ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என்றார்.