இந்தியா

25 ரயில் நிலையங்களில் சூடான பால், பர்கர் விற்க உணவுப்பொருள் மையம்

செய்திப்பிரிவு

ரயில்நிலையங்களில் தாய்மார்க ளின் வசதிக்காக, குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருள் விற்பனை மையத்தை டெல்லியில் நேற்று தொடங்கிவைத்து, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு பேசிய தாவது:

‘அம்மா’க்களை திருப்திப்படுத்த ‘ஜனனி சேவா’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். ‘ரயிலில் குழந்தைக்கு பால் கிடைக்கவில்லை என ஒருமுறை தாய் ஒருவர் ‘ட்விட்ட’ரில் பதிவிட்டிருந்தார். இதை கவனித்து உடனடியாக அந்த ரயிலில் பால் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

அதன் பிறகே ‘ஜனனி சேவா’ மையங்களை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. முதல்கட்டமாக டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, சென்னை, நாக்பூர், புனே, சூரத், லக்னோ மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட 25 ரயில் நிலையங்களில் இவ்வசதி அறிமுகமாகிறது.

குழந்தை உணவு தவிர, 5 முதல் 12 வயது பிரிவினருக்கு விருப்பமான ‘பர்கர்’ உள்ளிட்ட தின்பண்டங்களும் விற்பனை செய்யப்படும். பல திட்டங்கள் நிறைவேறியுள்ள நிலையில், மீதமுள்ள திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT