இந்தியா

காஷ்மீரில் புதையுண்ட 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

பிடிஐ

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது.

இந்த ராணுவச் சாவடிக்கு செல்லும் பனிப்பாதை நேற்று காலை திடீரென உடைந்து உள்வாங்கியதில் 5 ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். இதையடுத்து தகவலின் பேரில் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர். பனிப் பொழிவுடன் கூடிய மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்புப்பணி நடைபெற்றது. இதில் சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு 5 வீரர்களையும் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். பிறகு இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு காரணமாக கடந்த புதன்கிழமை முதல் 15 ராணுவ வீரர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT