டெல்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் 20 லஷ்கர் தீவிர வாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட, மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 பேர் நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், மத வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாது காப்பை பலப்படுத்த வேண்டும். சந்தேகத்துக்கிடமான நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா அல்லது மர்ம பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என தீவிரமாக கண் காணிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டர் நகர் உட்பட உலகின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.