மேற்கு வங்கத்தில் இருந்து கோர்காலாந்து தனி மாநிலம் கோரி டார்ஜிலிங் மலைப் பகுதியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
பர்துவான் நகரில் நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “மேற்கு வங்கத்தை பிரிக்க முடியாது. இதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.
மம்தா மேலும் பேசும்போது, “காஷ்மீர் மாநில பிரச்சினையை திறம்பட கையாள முடியாதவர்கள் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நோட்டம் விடுகின்றனர். என்ன சதி நடந்தாலும் நாம் ஒற்றுமையாக இருந்து போரிடு வோம்” என்றார்.