இந்தியா

ஆதார் எண் - பான் எண்ணை இணைக்க இணைய வசதி அறிமுகம்

பிடிஐ

இணையத்தில் ஆதார் எண்ணையும் - பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக வருமான வரித்துறை சார்பாக> https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில், "பயனாளர்கள் >https://incometaxindiaefiling.gov.in/ கிளிக் செய்து அதில் பயனாளர்கள் தங்களது ஆதார் எண், பான் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளர் பெயரை சரியாக பதிவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டது.

அதன்படி, வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம். மேலும் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும்.

மேலும், ஜூலை 1, 2017 பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT