காஷ்மீரில் சிறார்களை தவறாக வழிநடத்தி கலவரம் தூண்டப்படுகிறது என்று அந்த மாநில முதல்வர் மெகபூபா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று அவர் கூறியதாவது:
சில தலைவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்கின்றனர். அந்த தலைவர்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் மீது துளியும் அக் கறை கிடையாது. அவர்கள் சிறார் களை தவறாக வழிநடத்தி வன் முறையில் ஈடுபடச் செய்கின்றனர்.ஆனால் கடைசி நேரத்தில் அந்த தலைவர்கள் அங்கிருந்து தப்பி யோடி விடுகின்றனர். அப்பாவி குழந்தைகள் உயிர் பலியாகின்றனர்.
தெருக்களில் போராடும் ஆர்ப் பாட்டக்காரர்கள் அரசு கட்டிடங் களை எல்லாம் இடித்து தரைமட்ட மாக்குகின்றனர். இதனால் காஷ்மீருக்குதான் இழப்பு. அந்த கட்டிடங்களை மீண்டும் கட்ட பல ஆண்டுகள் ஆகும்.
கடந்த 15 ஆண்டுகளாக காஷ்மீர் குழந்தைகள் வன்முறை களத்தில் வளர்ந்து வருகின்றனர். அவர்களை மேலும் வன்முறை பாதைக்கு தள்ள வேண்டாம். சிலரின் சுயலாபத் துக்காக பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க அனுமதிக்கக்கூடாது.
துப்பாக்கியும் வெடித்துச் சிதறும் குண்டுகளும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. பேச்சு வார்த்தை மட்டுமே அமைதிக்கு வழிவகுக்கும். இவ்வாறு மெகபூபா தெரிவித்துள்ளார்.