இந்தியா

மோடியின் பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

அசுத்தம், சோம்பேறித்தனம் நிறைந்த நாடு இந்தியா என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது கூறியதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களின் குற்றச் சாட்டு தவறானது. இக்கருத்தை நான் ஒருபோதும் கூறியதில்லை. அதே சமயம், 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது குப்பை கூளங்கள் அதிகமிருக்கும் நாடுகளுக்கு நோபல் பரிசு தருவதென்றால், அதற்கு தகுதியான நாடு இந்தியா என்று கூறினேன்.

இந்தியாவில்தான் ஏராளமானோர் திறந்த வெளிக்கழிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும், சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம்தான் வீடுபேறு கிடைக்கும், ஆன்மிகத்தின் மூலமாக மட்டும் அல்ல என்றும் கூறினேன். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT