ஆம் ஆத்மியில் சேருவதற்கு அக்கட்சி விடுத்த அழைப்பை ஏற்பது குறித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் பரிசீலித்து வருகிறார்.
தேசிய மக்கள் இயக்க கூட்டமைப்பின் தலைவரான மேதா பட்கர், சர்தார் சரோவர் திட்டத்திற்காக இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக ஆதரவு அளித்து வருபவர்.
கிராமப்புற மக்களின் நிலம், நீர் உள்ளிட்ட வாழ்வாதரங்களுக்காக பல தன்னார்வு நிறுவனங்களை கொண்டு மேதா பட்கர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தேர்தல் குழு உறுப்பினரான யோகந்திர யாதவ், தான் மேத்தா பட்கரை சந்தித்து கட்சியில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.
தமது அழைப்புக்கு மேதா பட்கர் சாதகமாக பேசியுள்ளதாக, 'தி இந்து' செய்தியாளரிடம் யோகந்திர யாதவ் தெரிவித்தார். மேலும், யோகேந்திர யாதவின் அழைப்பை மேதா பட்கரும் உறுதிபடுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் பழங்குடி கிராம மக்களிடையே மதிப்பும் செல்வாக்கும் பெற்றவர் மேதா பட்கர் என்பது குறிப்பிடதக்கது.