இந்தியா

தெலங்கானா மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்?

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

முன்னதாக இந்த மசோதாவை பிப்ரவரி 12-ம் தேதி தாக்கல் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது முன்கூட்டியே மசோதாவை தாக்கல் செய்யவும் 32 திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திர சட்டமன்றத்தில் நீண்ட விவாதத்துக்குப் பின் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதையெல்லாம் மீறி மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

SCROLL FOR NEXT