இந்தியா

நாக சைதன்யாவுக்கு சமந்தா கொடுத்த பரிசு

என்.மகேஷ் குமார்

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடி கருமான நாக சைதன்யாவுக்கு விலை உயர்ந்த பைக்கை நடிகை சமந்தா பரிசாக வழங்கியுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

நாக சைதன்யாவும், சமந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதித்துள்ள நிலையில் விரைவில் நிச்சயதார்த்தம் நடை பெறவுள்ளது. வெளிநாடுகளிலும், ரசிகர் தொல்லை அதிகமில்லாத இடங்களிலும் சந்தித்துக் கொள்ளும் இவர்கள் ஒருவருக் கொருவர் பரிசுகளைக் கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்தி வருகிறனர். இந்நிலையில் நாக சைதன்யாவுக்கு ரூ.27 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கை சமந்தா பரிசாக வழங்கி உள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக்கை செவ்வாய் கிழமையன்று நாக சைதன்யாவே ஹைதராபாத்தில் உள்ள கொண்டாப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டிச்சென்று வாகனப் பதிவு செய்தார். இந்த வாகனத்துக்கு வாழ்நாள் சாலைவரியாக ரூ.4.5 லட்சம் செலுத்தியதாக நாக சைதன்யா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT