இந்தியா

பஞ்சாப் முன்னாள் டிஜிபி கேபிஎஸ்.கில் காலமானார்: காலிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்கியவர்

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கேபிஎஸ் கில் காலமானார். அவருக்கு வயது 82.

சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கில், கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பஞ்சாப்பில் நடைபெற்ற காலிஸ்தான் தீவிரவாத தாக்குதல்களை கட்டுக்குள் கொண்டு வந்தது. காலிஸ்தான் இயக்கத்தை ஒழித்தவர் என்று கில் பாராட்டப் படுகிறார். 1988ம் ஆண்டு நடைபெற்ற ஆப்பரேஷன் பிளாக் தண்டருக்கு தலைமையேற்றவர் கேபிஎஸ்.கில் என்பது குறிப்பிடத்தக்கது.

2000-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக உத்திகளை வகுக்க இலங்கை அரசு கில்லை அழைத்தது குறிப்பிடத்தக்கது.

2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு அம்மாநில பாதுகாப்பு ஆலோசகராகச் செயல்பட்டார் கில்.

SCROLL FOR NEXT