கோடை விடுமுறை என்பதால் திருமலையில் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய கூட்ட நெரிசல் உள்ளது. இதனால் சர்வ தரிசனம் செய்ய நேற்று 12 மணி நேரம் ஆனது.
ஏழுமலையானைத் தரிசிக்க வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் அலைமோதினர். இதனால் 31 அறைகளும் நிரம்பி, வெளியே உள்ள நாராயணகிரி வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட் டத்தால் மேலும் 3 நாட்களுக்கு சிபாரிசு கடிதங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.