கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்க வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வடோதராவில் நடைபெற்ற மாநாட்டில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் பேசியதாவது:
“டாடா, பிர்லா, ரிலையன்ஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க உரிமம் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. இது நாட்டு நலனுக்கு எதிரானது. வங்கிச் சேவையை பெற வாடிக்கையாளர்கள் பெரும் செலவு செய்ய வேண்டிய நிலையை இது ஏற்படுத்தும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவை. அவர்களுக்கு வங்கி உரிமங்களை வழங்கினால், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்” என்றார்.