இந்தியா

தெற்கு காஷ்மீரில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை

பீர்சதா ஆஷிக்

காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் விட்டில் பதுங்கியுள்ள இரு தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் வீட்டில் பதுங்கியுள்ள இரு தீவிரவாதிகளை பிடிக்க காலை 5 மணி முதல் துப்பாக்கிச் சூடு நடத்து வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள விட்டின் பின்பகுதியில் இறந்த நிலையில் உடல் ஒன்று காணப்படுகிறது. எனினும் இறந்துள்ளது தீவிரவாதியா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடத்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக காஷ்மீரின் தெற்குப் பகுதியில் ட்ரால் எனும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT